நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 500,000 ரூபா ஆரம்பகட்ட இழப்பீடு மாத்திரமே என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 500,000 ரூபா ஆரம்பகட்ட இழப்பீடு மாத்திரமே என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இழப்பீட்டுத் தொகை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 மில்லியனுக்கும் அதிக தொகையை மொத்த இழப்பீடாக வழங்குவது குறித்து திணைக்களம் தற்போது பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இழப்பீடு

உயிரிழந்த அதிகாரிகளின் இறுதிச் சடங்குச் செலவுகள் அனைத்தையும் சிறைச்சாலைகள் திணைக்களமே ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இச்சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இழப்பீடு வழங்குவது குறித்தும் திணைக்களம் அவதானம் செலுத்தி வருகிறது. காயமடைந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் கஜநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.