நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தலா 05 இலட்சம் ரூபா நஷ்டஈடு ஒரு ஆரம்பக்கட்ட தொகை மட்டுமே என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து பலர் எழுப்பிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சிற…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தலா 05 இலட்சம் ரூபா நஷ்டஈடு ஒரு ஆரம்பக்கட்ட தொகை மட்டுமே என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து பலர் எழுப்பிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சத்திற்கு அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்து இறுதிச் சடங்கு ஏற்பாடுகளும் சிறைச்சாலைத் திணைக்களத்தின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், மோதலில் காயமடைந்த சிறை அதிகாரிகளுக்கு சில இழப்பீடுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும், மோதலில் காயமடைந்த 7 சிறை அதிகாரிகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்களில் மூவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் இன்னமும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

