நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதலுக்கு தலைமை தாங்கியதாக கூறப்படும் 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்பவர் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த மோதல் காரணமாக ஏற்பட்ட அமைதியின்மையால் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன்,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவ…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதலுக்கு தலைமை தாங்கியதாக கூறப்படும் 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்பவர் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த மோதல் காரணமாக ஏற்பட்ட அமைதியின்மையால் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன்,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பின்னணியில் பாதாள உலக உறுப்பினர்கள் இந்நிலையில், பாதாள உலகக் குழு உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான கட்டுவெல்லகம சுரேஷ் என்பவரே மோதலுக்கு தலைமை தாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. போதைப்பொருள் கடத்தல் சம்பவம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுவெல்லேகம சுரேஷ் மீது, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், கொள்ளையடித்தல், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2016-ஆம் ஆண்டில் நாரம்மலை பகுதியில் துறவியையும் அவரது உதவியாளரையும் தாக்கியதாகவும் இந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அவர் மீதான ஒரு வழக்கு நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் மற்றுமொரு வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.சிறைக்குள் 26 பாதாள உலக உறுப்பினர்கள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் குறுகிய கால கைதிகள் மற்றும் விளக்கமறியல் சந்தேகநபர்கள் என 2,400-க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் அங்கு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இருப்பினும், நேற்று (06) மற்றும் முன்தினம் (05) சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக உடனடியாக கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இன்று (07) காலை நிலவரப்படி, இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலையின் உள்ளேயும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

