சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்கள் விளக்கமறியலில் உள்ளவர்களாக இருக்கலாம் அல்லது தண்டனை அனுபவிக்கும் கைதிகளாக இருக்கலாம்; எவ்வாறாயினும், அவர்கள் அரசாங்கத்தின் பொறுப்பிலேயே இருக்கிறார்கள். எனவே,…

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்கள் விளக்கமறியலில் உள்ளவர்களாக இருக்கலாம் அல்லது தண்டனை அனுபவிக்கும் கைதிகளாக இருக்கலாம்; எவ்வாறாயினும், அவர்கள் அரசாங்கத்தின் பொறுப்பிலேயே இருக்கிறார்கள். எனவே, அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர் பாதுகாப்புத் தொடர்பிலான அடிப்படைப் பொறுப்பு அரசாங்கத்திற்கே உரியதாகும் (தொகுதி 280, இலக்கம் 07, 2020 நவம்பர் 30 ஹன்சாட் அறிக்கை).

ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களுக்குள் நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பாரதூரமான அமைதியின்மை மற்றும் மோதல்கள் காரணமாக, தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100-இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். எனவே, மேற்கூறிய மரணங்கள் மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான பொறுப்பு அரசாங்கத்தையே சாரும்.

அதற்கிணங்க, இவ்விடயத்திலுள்ள பாரதூரத்தன்மை மற்றும் அவசரத் தன்மையைக் கருத்திற்கொண்டு, இது தொடர்பாகப் பாராளுமன்றத்தின் அவசர கவனத்தைச் செலுத்துவதற்காக, நிலையியற் கட்டளை 19(1)-இன் கீழ் அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றிற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு தங்களிடம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.