புதிய இணைப்புநீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் ஒன்று திரண்டுள்ள கைதிகளின் உறவினர்களால் களத்தில் சற்று பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலைக்கு முன்பாக திரண்டுள்ள மக்கள் தங்களை உள்ளேச் செல்ல அனுமதிக்குமாறும், தங்களை உறவினர்களைக் காண வேண்டும் எனவும் கூச்சலிட…

புதிய இணைப்புநீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் ஒன்று திரண்டுள்ள கைதிகளின் உறவினர்களால் களத்தில் சற்று பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலைக்கு முன்பாக திரண்டுள்ள மக்கள் தங்களை உள்ளேச் செல்ல அனுமதிக்குமாறும், தங்களை உறவினர்களைக் காண வேண்டும் எனவும் கூச்சலிட்டு வருகின்றனர். இந்தநிலையில், அங்கு சற்று பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.  மேலும், கலகமடக்கும் பொலிஸார், மேலதிக பொலிஸார் மற்றும் மேலதிக இராணுவத்தினர் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். முதலாம் இணைப்புநீர்கொழும்பு சிறைச்சாலைக்கு முன்பாக மீண்டும் கைதிகளின் உறவினர்கள் ஒன்று திரண்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில்  நேற்று முன்திம் மற்றும் நேற்றையதினம் ஆகிய இரு தினங்களில் ஏற்பட்ட கடும் கலவரத்தில் 26 பேர் வரையில் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். இந்தநிலையில், சிறைச்சாலைக்கு முன்பாக கைதிகளின் உறவினர்கள் ஒன்று திரண்டு கடும் கூச்சலிட்டு அழுது போராடினர்.கூச்சலிட்டு வருகின்றனர்நேற்று மாலை கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர்,  சிறைச்சாலையில் இருந்த கைதிகள் ஏனைய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். இந்தநிலையில், இன்று காலை மீண்டும் சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று திரண்டுள்ள கைதிகள் தமது உறவினர்களைக் காண வேண்டும் என கூச்சலிட்டு வருகின்றனர். தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது, அவர்களை நாங்கள் காண வேண்டும், உண்மையான விடயங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என அவர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.கலவரத்தின் பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.