எதிர்வரும் நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையை அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையாக மாற்றுவதற்கு நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலை திணைக்கள உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வைத்து குற்றச் செயல்களின் அடிப்படையில் கைது செய்யப்படும் வெளிநாட்டவர்கள் மற்றும் பாரிய…
எதிர்வரும் நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையை அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையாக மாற்றுவதற்கு நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலை திணைக்கள உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் வைத்து குற்றச் செயல்களின் அடிப்படையில் கைது செய்யப்படும் வெளிநாட்டவர்கள் மற்றும் பாரியளவான போதைப் பொருள் கடத்தல்காரர்கள், வெளிநாடுகளுக்குத் தப்பியோட முற்படும் குண்டர்கள் ஆகியோர் கைது செய்யப்படும்போது பெரும்பாலும் நீர்கொழும்பு சிறைச்சாலையிலேயே இதுவரை காலமும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.பலத்த கேள்வி இந்நிலையில் கடந்த 05 மற்றும் 06ம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரங்கள், சிறைச்சாலையின் பாதுகாப்பு குறித்து பலத்த கேள்விகளை எழுப்பியிருந்தது. இதன்போது ஏற்பட்ட சிறைச்சாலை சேதங்கள் தொடர்பான புனரமைப்புப் பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் நீர்கொழும்பு சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகளின் போது அதனை அதியுயர் பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையாக புனரமைப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

