நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின்போது கைதிகள் தரப்பினால் கைப்பற்றப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகளும் பாதுகாப்பு தரப்பினரால் தற்போது மீட்கப்பட்டுள்ளது. சிறைக்கூடங்கள் மத்தியில் குறித்த துப்பாக்கிகள் இரண்டும் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.நீர்கொழும்பு சிறைச்சாலை வ…
நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின்போது கைதிகள் தரப்பினால் கைப்பற்றப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகளும் பாதுகாப்பு தரப்பினரால் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
சிறைக்கூடங்கள் மத்தியில் குறித்த துப்பாக்கிகள் இரண்டும் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் தற்போதைக்கு அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளின் போதே கைதிகள் தரப்பில் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அன்றைய தினம் பிற்பகலில் நிலைமை மோசமாக தொடங்கியதை அடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த சிறையின் விரைவுத் தாக்குதல் தந்திரோபாயப்படையின் உத்தியோகத்தர்கள் சிறைச்சாலையின் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றபோது, சிறைச்சாலை பிரதான நுழைவாயில் அருகே திரண்டிருந்த கைதிகள் குழு ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வன்முறையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சில அதிகாரிகளின் தலைகளில் பெரிய கற்கள் வீசப்பட்டதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னர் அந்தக் குழு சிறைச்சாலையின் பாதுகாப்புக் கோபுரமொன்றுக்குள் ஏறி அங்கிருந்து ஒரு துப்பாக்கியையும், துப்பாக்கிகளைப் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்படும் அறையிலிருந்து மற்றொரு துப்பாக்கியையும் பலவந்தமாக கைப்பற்றிக்கொண்டுள்ளனர்.சிறைக்குள் நுழைந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு ரிப்பீட்டர் வகை துப்பாக்கியும், ஒரு டி-56 வகை துப்பாக்கியும் அவர்களால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. கைதிகள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிகளால் சில அதிகாரிகளை சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், அவர்கள் தங்கள் எதிரிகளுடனும் மோதலில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் சிறைக்குள் நுழைந்தபோது, பலவந்தமாகக் கைப்பற்றிக்கொள்ளப்பட்ட ஒரு துப்பாக்கி கைதியொருவரின் கைகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்பின்னர், நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடடிக்கையின் போது பாதுகாப்பு அதிகாரிகள் சிறைக்குள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த இரண்டு துப்பாக்கிகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

