நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டு இருப்பதுடன் விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளும் கொலை செய்யப்பட்டு இருந்தனர்.இந்த சம்பவத்திற்கு காரணமான…

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டு இருப்பதுடன் விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளும் கொலை செய்யப்பட்டு இருந்தனர்.இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை அடையாளம் காணும் விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்தநிலையில், 14 கைதிகள் துப்பாக்கி காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கின்றார்கள்.அதில் இந்தியர் ஒருவர் உட்பட நான்கு பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.துப்பாக்கிக் காயங்களுடன் உயிரிழந்த கைதிகளின் உடல்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மாதிரிகள் நீதிமன்றின் உத்தரவில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் அடையாளம் காணும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.மேலும், துப்பாக்கிக் குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.துப்பாக்கிக் குண்டுகளை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களோ அல்லது சுட்ட நபரோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை.இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.