நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் பலர் கொலைச் செய்யப்பட்டு கடும் சோகத்தை ஏற்படுத்தினாலும் சிறைச்சாலை கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் செய்த பெண் கைதிகளில் அமைதியான அழகான பெண்ணான சந்துனி சமூக ஊடகங்களில் அனைவரின் அவதானத்தையும் ஈர்த்தெடுத்தார்.அதனால் என்னவே அந்த கூட்டத்தில் இருந்த வைத்திய…

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் பலர் கொலைச் செய்யப்பட்டு கடும் சோகத்தை ஏற்படுத்தினாலும் சிறைச்சாலை கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் செய்த பெண் கைதிகளில் அமைதியான அழகான பெண்ணான சந்துனி சமூக ஊடகங்களில் அனைவரின் அவதானத்தையும் ஈர்த்தெடுத்தார்.அதனால் என்னவே அந்த கூட்டத்தில் இருந்த வைத்தியர் பிரியாவை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவரின் வாழ்க்கையும் சந்துனியை போல சூழ்ச்சிகளில் சிக்கி சிறைக் கம்பிக்குள் அகப்பட்டுள்ளது. வைத்தியர் பிரியாவின் நெஞ்சை நெருடும் கதை:டாக்டர் பிரியாவின் ஏழ்மை குடும்பம்டாக்டர் பிரியாவின் கதை. பிரியா மருதானையில் வசித்து வந்தவர். அவர் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. தாயார் கொழும்பு மாநகரசபை துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்தார். தந்தை மருதானையில் உள்ள வாகன இருக்கை உறை (Seat Cover) தைக்கும் கடைகளில் கூலி வேலை செய்து வந்தார். இவர்கள் மருதானையில் உள்ள ஒரு சிறிய வீட்டின் ஒரே ஒரு அறையில் தான் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உறங்கினர். அது ஒரு தனித்துவமான பிணைப்பைக் கொண்ட குடும்பம். பிரியாவின் அண்ணன் ஒரு மென்பொருள் பொறியாளர் (Software Engineer) ஆனார். அண்ணன் குடும்பத்தை கவனிக்க, தங்கை பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறாள். பிரியாவின் முயற்சி, தன் தங்கையை ஒரு விமானப் பணிப்பெண் (Air Hostess) ஆக்க வேண்டும் என்பதாக இருந்தது. பிரியா தனது வறுமையின் காரணமாகவே மிகவும் நன்றாகப் படித்தார். பொரளை பகுதியில் ஒரு வீட்டை வாங்கி, குடும்பத்தினருடன் அங்கு குடியேறினர். அவரது அண்ணனும் பன்னிபிட்டிய பகுதியில் குடியேறினார். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் பிரியாவின் பெற்றோர் அவருக்கு நல்ல கல்வியை வழங்கினர்.

சமூகப் பற்றுபிரியா எப்போதுமே சேரிப் பகுதியில் தனது சகோதர சகோதரிகள் மற்றும் சிறுவர் சிறுமிகள் வாழும் வாழ்க்கை குறித்து மிகுந்த விரக்தியில் இருந்தவர். ஏனெனில் அங்கு பலர் 'குடு' மற்றும் 'ஐஸ்' (போதைப்பொருட்கள்) போன்றவற்றுக்கு அடிமையாகியிருந்தனர். வாழ்க்கையே அழிந்து போயிருந்தது. குடும்பங்கள் சீரழிந்து போயிருந்தன. பிரியா பல்கலைக்கழகக் கல்வியை முடித்துவிட்டு, வைத்தியராக பணிபுரிந்து, பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றத்தைப் பெற்று வந்தார். இதற்கிடையில் அவர் மருதானையில் ஒரு மருந்தகத்தைத் திறந்து, தனது பகுதி மக்களுக்கு இலவசமாக மருந்து வழங்கத் தொடங்கினார்.அப்போது அவர் டாக்டர் பிரியா என அழைக்கப்பட்டார். போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர், யுவதிகளுக்கு அவர் சிகிச்சை அளித்தார். ஒரு முகநூல் பக்கத்தை உருவாக்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதேபோல் டிக்டொக் (TikTok) தளத்திலும் அவர் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பத்தக்க ஒரு கதாபாத்திரமாக விளங்கினார். இதற்கிடையில், அவர் போதைப்பொருள் வியாபாரம் குறித்து ரகசியமாக பொலிஸாருக்கு தகவல் வழங்கி வந்தார். அந்த தகவல்களால் போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல் முற்றாக முடங்கியது. எப்படியோ, இந்த விடயம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தெரியவந்தது. டாக்டர் பிரியாவுக்கு தீட்டப்பட்ட சதி டாக்டர் பிரியாவின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க அவர்கள் தயங்கினர். ஏனெனில் சமூகத்தில் டாக்டர் பிரியாவுக்கு ஒரு பாரிய இடம் இருந்தது. எனவே, அவர்கள் ஒரு மாற்றுத் திட்டத்தைத் தீட்டினர். ஊழல் அதிகாரிகளுடன் இணைந்தே இந்தச் சதியைச் செய்தனர். டாக்டர் பிரியா அன்றைய தினமும் வழக்கம் போல் மருந்தகத்தைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் செல்கிறார். வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு வெளியே வரும்போதே பொலிஸார் அங்கு வருகின்றனர். "மேடம், எங்களுக்கு ஒரு தகவல் வந்தது, நீங்கள் போதை மாத்திரை வியாபாரம் செய்வதாக. வாருங்கள் மேடம், உங்களது மருந்தகத்திற்குப் போவோம்" என்று கூறினர். டாக்டர் பிரியாவுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அங்கு சென்று கதவைத் திறந்த பொலிஸார் டாக்டர் பிரியாவின் முன்னிலையிலேயே ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளைக் கண்டுபிடித்தனர். பிரியா இதில் சிக்க வைக்கப்பட்டார். இன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டு அவதிப்படுகிறார். சிறையில் அடைக்கப்பட்டாலும், டாக்டர் பிரியாவின் அந்த அநீதிக்கு எதிரான குரல் அடங்கவிடவில்லை. அவர் சிறைக்குள் இருந்து கொண்டே டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். சந்துனி மற்றும் டாக்டர் பிரியா ஆகிய இருவரின் கதைகளும் சமூகத்திற்குத் தரும் செய்தி மிகவும் தெளிவானது. மதியை மறந்து எடுக்கும் ஒரே ஒரு தவறான முடிவால் முழு வாழ்க்கையுமே தலைகீழாக மாறிவிடலாம். சிறைச்சாலையின் இரும்புக்கதவுகள் மூடப்பட்ட பிறகு, மீண்டும் திரும்ப நினைக்கும் பாதைகள் மிகவும் கடினமானவை. மருத்துவப் பீடத்திற்குச் செல்ல கனவு கண்ட சந்துனிக்கும், சமூகத்தை சீர்படுத்த நினைத்த டாக்டர் பிரியாவுக்கும் இன்று எஞ்சியிருப்பது கொடூரமான சிறைக்கம்பிகள் மட்டும்தான்.