நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்…

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தமாக 31 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவங்களுக்கு தாம் பொறுப்பேற்பதாக நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அமைச்சு பொறுப்பிலிருந்து ஹர்சன நாணயக்கார விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த பின்னணியில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.