நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "நீர்கொழும்…
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுக்கின்றன. இது முற்றிலும் அர்த்தமற்ற ஒரு நடவடிக்கையாகும்.நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைஇதற்கு முன்னரும் எதிர்க்கட்சிகள் இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வந்தபோதும், விவாதங்களின் போது அவர்களால் தர்க்க ரீதியான கருத்துகளை முன்வைக்க முடியவில்லை. அந்த வரிசையில், இந்தப் பிரேரணையும் தோல்வியிலேயே முடியும்" என குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின்னணி மற்றும் அது தொடர்பான காரணங்கள் குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

