தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச நேற்று நீதிமன்றத்தில் ஏழாவது தடவையாகவும் முன்னிலையாகவில்லை என தெரியவந்துள்ளது. அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கின் முக்கிய சாட்சியான, சர்ச்சைக்குரிய சொத்தை பிரதிவாதிக்க…

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச நேற்று நீதிமன்றத்தில் ஏழாவது தடவையாகவும் முன்னிலையாகவில்லை என தெரியவந்துள்ளது.

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கின் முக்கிய சாட்சியான, சர்ச்சைக்குரிய சொத்தை பிரதிவாதிக்கு விற்ற நபர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று தெரியவந்துள்ளது.

பிரதிவாதிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் சில காணிகள் தொடர்பில் நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் சாட்சி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

பிரதிவாதியான விமல்எனினும், தனக்கு தொற்று காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அறிவித்து பிரதிவாதியான விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில், விமல் வீரவங்ச கடந்த 17 ஆம் திகதி முதல் கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளார்.

உயிரிழந்த சாட்சிக்கு மேலதிகமாக, மக்கள் வங்கியின் தொல்கஹவத்தை கிளை முகாமையாளர், மாகாண காணி மதிப்பீட்டாளர் உள்ளிட்ட மூவர் நேற்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த வழக்கு தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கௌசல்யா ஹெட்டியாராச்சி, சுரேகா தரங்கனி, ஜே. லியானகே ஆகிய மூன்று சாட்சிகளுக்கும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

சொத்துக்கள் மற்றும் உடைமைஇது தவிர, முறைப்பாட்டின் 38ஆவது சாட்சிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. விமல் வீரவன்ச அமைச்சராக பதவியாற்றிய 2010 - 2014ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டு காலப்பகுதியில் தனது சம்பளம் மற்றும் பிற வருமானங்கள் மூலம் ஈட்டிக்கொள்ள முடியாத சுமார் 75 மில்லியன் ரூபாய் சொத்துக்கள் மற்றும் உடைமைகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சொத்துக்களுக்கு இடையில், பிரதிவாதியின் மனைவி, அவரது சகோதரி மற்றும் மைத்துனர் இணைந்து 18 இலட்சம் ரூபாய்க்கு ஹோமாகம பிரதேசத்தில் கொள்வனவு செய்த காணியொன்றும் உள்ளடங்குவதாக சாட்சிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.