நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அல்லது பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்தால், தாம் உடனடியாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.நீத…
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அல்லது பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்தால், தாம் உடனடியாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அரசமைப்புக்கு முரணான வகையிலோ அல்லது முறையற்ற நடைமுறையிலோ நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே தாம் இந்தத் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மை எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும், நீதிபதிகளின் பதவிக்காலம் தொடர்பான தீர்மானங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கும் சட்ட நடைமுறைகளுக்கும் அமையவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சுஜீவ சேனசிங்க வலியுறுத்தியுள்ளார்.

