எங்களுடைய நாட்டின் தற்போதைய நிலவரங்களை பார்க்கின்ற பொழுது தற்போதைய ஆட்சியை கவிழ்ப்பதற்கான பல்வேறு திட்டங்களை எதிர்க்கட்சிகள் கூட்டாக ஒன்றிணைந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் நோக்கம் என்ன? எந்த வகையிலான திட்டங்களை இவர்கள் தன்னகத…

எங்களுடைய நாட்டின் தற்போதைய நிலவரங்களை பார்க்கின்ற பொழுது தற்போதைய ஆட்சியை கவிழ்ப்பதற்கான பல்வேறு திட்டங்களை எதிர்க்கட்சிகள் கூட்டாக ஒன்றிணைந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் நோக்கம் என்ன? எந்த வகையிலான திட்டங்களை இவர்கள் தன்னகத்தில் வைத்திருக்கிறார்கள்? என லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமூக செயற்பாட்டாளர் சிராஜ் யூனுஸின் கேள்வி எழுப்பினார். தயாசிறி ஜயசேகரவின் நேர்காணல் ஒன்றின் கலந்துகொண்டு உரையாற்றியபோது, அங்கு அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு ஆதாரவாளராக செயற்பட்டதாக என்மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன என அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் இனவாதிகள்“ என நான் என்னுடைய முகநூல் பக்கத்தில் சுட்டிக்காட்டியதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் நான் அவ்வாறு சொல்லவில்லை.

நான் ஒரு இனவாதி அல்ல. அன்று நான் மொட்டுக்கட்சியுடன் ஒன்றிணைந்தவனாக இருந்தேன். ஆனால் அவர்களுடைய ஊழல்கள் எனக்கு தெரியவந்ததன் பின்னர் அந்தக் கட்சியில் இருந்து நான் இடைவிலகினேன் என தெரிவித்திருந்தார். அவர் வெளிப்படுத்தியிருந்த இன்னும் சில பரபரப்பான கருத்துக்களை நேருக்கு நேர் நிகழ்ச்சியின் ஊடாக பார்ப்போம்..