பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை ஒருமனமாக எதிர்ப்பதாக நீதிச்சேவை சங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையின் மாவட்ட மற்றும் மாஜிஸ்திரேட் நீதவான்களைக் கொண்ட நீதிச்சேவை சங்கத்தின் இன்றைய…
பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை ஒருமனமாக எதிர்ப்பதாக நீதிச்சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் மாவட்ட மற்றும் மாஜிஸ்திரேட் நீதவான்களைக் கொண்ட நீதிச்சேவை சங்கத்தின் இன்றைய நிறைவேற்றுக்கு குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த பொதுக் கூட்டம் நேற்று (11) இடம்பெற்றது. திருத்த முன்மொழிவு
இந்த நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, நீதிச் சேவைகள் சங்கத்தின் (JSA) ஒரு விசேட பொதுக் கூட்டம் நேற்று (11) கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றிருந்தது.
இந்தக் கூட்டம் ஆரம்பத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தாலும், அனுமதி கிடைக்காத காரணத்தினால் கடுவெலவுக்கு மாற்றப்பட்டிருந்தது. இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நீதிபதிகளும் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவை கடுமையாக எதிர்த்துள்ளனர். இதனை அவர்கள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய நீதிச்சேவைகள் சங்க நிறைவேற்றுக் குழுவின் கூட்டத்துக்கு அதன் மூன்றில் ஒரு பங்கு அளவான 65 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்த காரணத்தினால் அவர்களின் தீர்மானம் செல்லுபடியற்றது என்றும் இன்னொரு தரப்பு நீதிபதிகள் குழுவொன்று விமர்சித்துள்ளது.

