திருகோணமலை- நிலாவெளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (15) நிலாவெளி, வள்ளுவர் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் முன்னெடுக்கப்பட்டது. திருகோணம…
திருகோணமலை- நிலாவெளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (15) நிலாவெளி, வள்ளுவர் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் பேரில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.விசாரணைஇதன்போது சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்கள் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.
விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி எம்.எம்.என்.டி. திலகரத்ன மற்றும் அதிகாரி எச்.எம்.டி. மாலித் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்தச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

