“நிர்வாணப் படமாக மாற்றும்” செயலிகளை அங்காடிகளில் இருந்து நீக்குமாறு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி உத்தரவு… வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join நிழற்படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி நபர்களை நிர்வாணமாகக் காட்டும் த…

“நிர்வாணப் படமாக மாற்றும்” செயலிகளை அங்காடிகளில் இருந்து நீக்குமாறு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி உத்தரவு…

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

நிழற்படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி நபர்களை நிர்வாணமாகக் காட்டும் திறன் கொண்ட “நிர்வாணப் படமாக மாற்றும்” (Nudify) செயலிகளை தங்களது செயலி அங்காடிகளில் (App Store) இருந்து நீக்குமாறு அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் மூன்றாம் தரப்பினருக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநில சட்டத்தின்படி, ஒருவரின் அனுமதியின்றி Deepfake ஆபாச (Pornographic) படங்கள் உருவாக்கப்படுவதையோ அல்லது அதனை ஊக்குவிப்பதையோ குற்றமாகக் கருதுகிறது.

சான் பிரான்சிஸ்கோ நகர சட்டத்தரணி டேவிட் சியூ, பெண்கள் மற்றும் சிறுமிகளைக் குறிவைத்து அனுமதியின்றி Deepfake படங்களை உருவாக்கும் செயலிகளின் மூலம் அப்பிள் மற்றும் கூகுள் இலாபம் ஈட்டியுள்ளதாகக் குற்றம்சாட்டியதுடன், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தொழில்நுட்ப வெளிப்படைத் திட்டம் {Tech Transparency Project (TTP)} வெளியிட்ட அறிக்கையின்படி,

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை அப்பிள் மற்றும் கூகுளின் செயலி அங்காடிகளில் அதிகளவில் Nudify செயலிகள் இடம்பெற்றிருந்ததுடன், அவற்றின் மூலம் அனுமதியின்றி உருவாக்கப்பட்ட தனிப்பட்ட படங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.