மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி 27.5 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜயலத் பண்டார திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீரக…

மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி 27.5 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜயலத் பண்டார திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீரக்கெட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி 27.5 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCIB) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதி மற்றும் வணிகக் குற்றங்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

விசாரணைகளைத் தொடர்ந்து, ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து 58 வயதுடைய ஜயலத் பண்டார திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (ஜூலை 15) செவ்வாய்க்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.