நியூசிலாந்தின் தெற்குத் தீவில் டீ அனாவு நகருக்கு அருகே 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி டீ அனாவுவிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் வடக்கே அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்…
நியூசிலாந்தின் தெற்குத் தீவில் டீ அனாவு நகருக்கு அருகே 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி டீ அனாவுவிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் வடக்கே அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்வால் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர்.
சில மணி நேரங்களுக்குப் பின்னர் சுனாமி எச்சரிக்கை கடல்சார் அறிவுறுத்தலாகக் குறைக்கப்பட்டிருந்தாலும், கடலோரப் பகுதிகளில் ஆபத்தான அலைகள் மற்றும் வலுவான நீரோட்டம் தொடரக்கூடும் என்பதால் பொதுமக்கள் கடற்கரைகளைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுவரை உயிர்ச்சேதம் அல்லது பாரிய சேதம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
