அரசாங்கம், அதிகாரிகள், மக்கள் என மூன்று பிரிவினர் உள்ளனர். நாம் அனைவரும் ஒன்றினைந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் ஒரு புதிய கலாசாரத்தினை உருவாக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத்தலைவருமான மஞ்சுள சுரவீர தெரிவித்துள்ளார். 62 கோடி ரூபா செலவிலான…
அரசாங்கம், அதிகாரிகள், மக்கள் என மூன்று பிரிவினர் உள்ளனர். நாம் அனைவரும் ஒன்றினைந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் ஒரு புதிய கலாசாரத்தினை உருவாக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத்தலைவருமான மஞ்சுள சுரவீர தெரிவித்துள்ளார். 62 கோடி ரூபா செலவிலான நோர்ட்டன் - தியகல பிரதான வீதி புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அபிவிருத்தி வேலைத்திட்டம்அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் இன்று அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் செய்து கொடுக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வீதியில் மரம் ஒன்று வீழ்ந்தால் கூட அதனை வெட்டுவதற்கு அரசாங்க அதிகாரிகள் வர வேண்டும் என நினைக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சங்கங்கள் மற்றும் அமைப்புக்களை உருவாக்கி எமது பிரதேசத்திற்கு தேவையான அபிவிருத்தியினை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுத்துவதற்கான கலாசாரத்தினை உருவாக்க வேண்டும்.
அப்போது தான் இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் எமது பிரதேசத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும். இந்த அரசாங்கம் வளமான நாடு மாற்றும் அழகான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.வீதிப் புனரமைப்பு இன்று கூட நான் இவ்வாறான மூன்று அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துவிட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.
அதே போன்று இந்த பிரதேசத்தில் சுமார் 16 கிலோமீற்றர் கார்பட் இட்டு புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.இதனை அண்மித்த பிரதேசங்களுக்கு சுமார் 97 கிலோமீற்றர் கார்பட் இட்டு புனரமைப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் அபிவிருத்தி பணிகளுக்காக சுமார் 96 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் 60 பில்லியன் நிதி நுவரெலியா மாவட்டத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் இவ்வளவு காலம் எதிர்ப்பார்த்த அபிவிருத்தி தற்போது நகரத் தொடங்கியுள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு
இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலினால் பாரிய சிக்கல்கள் ஏற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இடம்பெற்று வருகின்ற அமெரிக்க மற்றும் ஈரானுக்கு இடையிலான யுத்தம் காரணமாக சர்வதேச ரீதியில் தார் மற்றும் எரிபொருள் பெற்றுக்கொள்வது தடையாக உள்ளது. எந்த தடைகள் வந்தாலும் டித்வாவினை முகாமைத்துவம் செய்து முன்னெடுத்தது போல் இதனையும் நாம் சிறந்த முறையில் செய்து முடிப்போம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

