தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் நீதித்துறை மீதான அரசியல் தலையீடுகளுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கையின் கூட்டு எதிர்க்கட்சி இன்று உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் குழுவினர்,…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் நீதித்துறை மீதான அரசியல் தலையீடுகளுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கையின் கூட்டு எதிர்க்கட்சி இன்று உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது.
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் குழுவினர், இன்று (15) காலை ஐநா அதிகாரிகளை நேரில் சந்தித்து இது தொடர்பான விரிவான எதிர்ப்பு மகஜரை கையளித்தனர். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயக விழுமியங்கள் சீர்குலைக்கப்படுவதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தில் நேரடித் தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றுள்ளதாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

