உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்கிடையில், நேற்று காலை மர்மமான முறையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன உயிரிழந்துள…
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்கிடையில், நேற்று காலை மர்மமான முறையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன உயிரிழந்துள்ளார். இவ்விவகாரம், நாட்டில் பெரும் பரபரப்பையும் அதிகாரிகள் மத்தியில் கடுமையாக கேள்விகளையும் எழுப்பியுள்ளது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன, பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சந்தன தீபால் விக்ரமரத்ன உண்மையில் தவறான முடிவெடுத்து தான் தனது உயிரை மாய்த்துக் கொண்டாரா என்னும் கேள்வி எழும்பியுள்ளது. இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

