Colombo (News 1st) நுவரெலியா தபால் நிலையத்தின் மேல் மாடியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.கீழ் மாடியில் தபால் நிலைய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதுடன் சுற்றுலாப் பயணிக…
Colombo (News 1st) நுவரெலியா தபால் நிலையத்தின் மேல் மாடியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.கீழ் மாடியில் தபால் நிலைய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதுடன் சுற்றுலாப் பயணிகளுக்கான உபசரிப்புச் சேவைகளை வழங்குவதற்கான வசதிகளும் அங்கு நிறுவப்படும் என பிரதி தபால் மாஅதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவித்தார். காலனித்துவ காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஐரோப்பியக் கட்டடக்கலையை பிரதிபலிக்கும் நுவரெலியா தபால் நிலையக் கட்டடத்தின் தொன்மை பாதுகாக்கப்படும் வகையில் குறித்த அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார். சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுலாத்துறை நிபுணத்துவம் கொண்ட நிறுவனமொன்றிடம் இருந்து ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

-557459_850x460.jpg)