சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊ…

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்தத் தகவலை வெளியிட்டனர்.மௌனம் சாதிக்கும் அரசு அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, "வடக்கு - கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளிலும், தமிழர் என்கின்ற அடையாளத்தோடு இலங்கைத் தீவின் அனைத்துப் பாகங்களிலும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் அரச படைகளாலும், துணை ஆயுதக்குழுக்களாலும் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.இந்தத் துயர் தோய்ந்த வரலாறு 1948 ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பிக்கின்றது.

இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்றோ, அதற்கான பொறுப்புக்கூறலையோ வெளிப்படுத்தாத இலங்கை அரசு, பல தசாப்தங்களாக மௌனம் சாதித்து வருகின்றது.

விசாரணை என்கின்ற பெயரில் 'திருடனே குற்றவாளியைத் தேடும் படலத்தை' அரசு அரங்கேற்றி வருகின்றது. நீதி கோரும் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் அரசின் உள்நாட்டுப் பொறிமுறைகள் குறித்து எமது பலத்த எதிர்ப்பையும், அதிருப்தியையும் நாம் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியே வருகின்றோம்.

இப்போது ஆட்சிப்பீடத்திலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசு, முந்தைய அரசுகளைவிட மிகத் தந்திரோபாயமாக இந்த விவகாரத்தைக் கையாள்கின்றது." என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.