அத்தனகல்ல, வெலகெதர பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்து, அங்கிருந்தவர்களுக்குக் கை, கால் மற்றும் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி, திருமணமாகாத நபர் ஒருவரைக் கொலை செய்தமை மற்றும் மூவரைப் படுகாயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, தாய், தந்தை, இரு பிள்ளைகள…

அத்தனகல்ல, வெலகெதர பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்து, அங்கிருந்தவர்களுக்குக் கை, கால் மற்றும் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி, திருமணமாகாத நபர் ஒருவரைக் கொலை செய்தமை மற்றும் மூவரைப் படுகாயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, தாய், தந்தை, இரு பிள்ளைகள் மற்றும் மற்றுமொருவருக்கு கம்பஹா மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

சுமிந்த மஞ்சுள, வஜிர இந்திக, டபிள்யூ. ஏ. சிறிசேன, ஜனகாந்தி மற்றும் டபிள்யூ. லலித் பிரியந்த குமார ஆகிய ஐவருமே தண்டனைக்குள்ளாகியுள்ளனர்.

2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த ஒரு நாளில், நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியகாவில, வெலகெதர பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் இரவு வேளையில் அத்துமீறி நுழைந்த இக்கும்பல், கல் மற்றும் தடிகளைக் கொண்டு தாக்கியதுடன், வாள்களால் வெட்டி எச். நிஹால் குமார எனும் திருமணமாகாத நபரைப் படுகொலை செய்துள்ளனர். அத்துடன், வீட்டில் இருந்த மேலும் மூவருக்குப் பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே, வெலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரு மகன்கள் மற்றும் மற்றுமொரு நபருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.