முதல்நாளே சிறைச்சாலையில் வெடித்த மோதலால் இருவர் உயிரிழந்த நிலையில், மீண்டும் சிறைச்சாலை வழமை நிலைக்குத் திரும்பியது என்ற அதிகாரிகளின் தவறான கணிப்பே நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கொடூரத்திற்கு காரணம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். கொழ…

முதல்நாளே சிறைச்சாலையில் வெடித்த மோதலால் இருவர் உயிரிழந்த நிலையில், மீண்டும் சிறைச்சாலை வழமை நிலைக்குத் திரும்பியது என்ற அதிகாரிகளின் தவறான கணிப்பே நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கொடூரத்திற்கு காரணம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.துரித நடவடிக்கை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் முதல் நாள் ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றியிருக்க வேண்டும்.

இவ்வாறு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மறுதினம் ஏற்பட்ட பாரிய மோதல் நிலை தவிர்க்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

உண்மையான நிலையை கணிப்பிடாமல், மாறாக கைதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் ஊடாக எட்டப்பட்ட தற்காலிக இணக்கப்பாட்டைக் கொண்டு அதிகாரிகள் செயலாற்றியமை தவறு என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளுக்கும், சிறை அதிகாரிகளுக்கும் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அப்படியாயின், ஒரு மணித்தியாலத்திற்குள் திடீரென எப்படி ஒரு கொடூர வன்மமும், பகையும் உருவாக முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.