நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (08) பாராளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் கறுப்புப் பட்டை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்திருந்தனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்ப…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (08) பாராளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் கறுப்புப் பட்டை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்திருந்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் 27 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்க்கட்சி முன்வைத்துள்ளது.