நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (09) காலை 11.00 மணி முதல் நாளை (10) காலை 11.00 மணி வரை செல்லுபடியாகும். மத்திய, சபரகமுவ, வடமத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம், ஹம்பாந்தோட்டை, மன்னார், திருகோணமலை ம…
நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (09) காலை 11.00 மணி முதல் நாளை (10) காலை 11.00 மணி வரை செல்லுபடியாகும்.
மத்திய, சபரகமுவ, வடமத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம், ஹம்பாந்தோட்டை, மன்னார், திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது. இதற்கிடையில், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.
இது தொடர்பாக கடற்படை மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், இது சம்பந்தமாக அது வெளியிடும் மற்ற அறிவிப்புகளுக்கும் கவனம் செலுத்துமாறும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

