கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு A35வீதியில் புனரமைப்பு பணிகள் கடந்த 2019 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட பலரது உயிரிழப்புக்கு காரணமான பாலம் தற்போது 95 விதமான பணிகள் நிறைவடைந்துள்ளன.கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறித்த பாலம் சேதமடைந்து இதன் புனரமைப்…
கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு A35வீதியில் புனரமைப்பு பணிகள் கடந்த 2019 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட பலரது உயிரிழப்புக்கு காரணமான பாலம் தற்போது 95 விதமான பணிகள் நிறைவடைந்துள்ளன.கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறித்த பாலம் சேதமடைந்து இதன் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 95 விதமான பணிகள்கடந்த 2023 ஆம் ஆண்டு இதன் பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இந்தப் இந்த பாலத்தடியில் ஏற்பட்ட விபத்துக்களால் நான்கு பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் தற்போது குறித்த பாலத்தை புனரமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து வடமாகாண ஆளுநர் மாவட்ட அரச அதிபர் ஆகியோரின் துரித முயற்சியால் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இதன் 95 விதமான வேலைகள் நிறைவுற்று இம்மாத இறுதிக்குள் மக்கள் போக்குவரத்துக்காக குறித்த பாலம் திறந்து விடப்பட உள்ளது.

