பலத்த காற்று குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை (16) காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின்படி, தெ…

பலத்த காற்று குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை (16) காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின்படி, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக மேற்படி பகுதிகளிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.