நாட்டின் சில கடல் பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று தொடர்பில் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் மற்றும் மன்னார் முதல் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும் உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40…

நாட்டின் சில கடல் பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று தொடர்பில் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் மற்றும் மன்னார் முதல் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும் உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை (11) முற்பகல் 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.

எனவே கடற்றொழிலாளர்கள் குறித்த கடல் பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.