பலத்த காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

பலத்த காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் மற்றும் கடற்சார் சமூகத்திற்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.