அண்மையில் நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பல்கலைக்கழக நுழைவிற்காக மொத்தம் 92,043 விண்ணப்பங்கள் பெறப்…
அண்மையில் நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு பல்கலைக்கழக நுழைவிற்காக மொத்தம் 92,043 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.கல்வி நடவடிக்கைகள் இந்த விண்ணப்பதாரர்களில் இருந்து, மொத்தம் 42,937 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறவுள்ளனர்.
அத்துடன், பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பல புதிய பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் புதிய கல்வி நடவடிக்கைகள் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் வசந்த லியனகே மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

