அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள மொகிதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணை இந்தச் சம்பவம் கடந்த 8ஆம் திகதி புதன்கிழமை காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலான காலப்பகுதியில…
அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள மொகிதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணை
இந்தச் சம்பவம் கடந்த 8ஆம் திகதி புதன்கிழமை காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான காட்சிகள் பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு (CCTV) கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

