உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அமெரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஃபோலரின் பலோகனுக்கு சிவப்பு அட்டை காட்டிய பிரேசிலிய நடுவர் ரஃபேல் கிளாஸின் நேர்மையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இதற்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளத…
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அமெரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஃபோலரின் பலோகனுக்கு சிவப்பு அட்டை காட்டிய பிரேசிலிய நடுவர் ரஃபேல் கிளாஸின் நேர்மையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
இதற்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, நடுவர் ரஃபேல் கிளாஸுக்குத் தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது.சிவப்பு அட்டை சர்ச்சை
பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணிக்கு எதிரான 'லாஸ்ட்-32' சுற்றின் போது, எதிரணி வீரரின் கணுக்காலில் பலோகன் மிதித்ததற்காக நடுவர் ரஃபேல் கிளாஸ் அவருக்குச் சிவப்பு அட்டை விதித்தார். பின்னர் ஃபிஃபா இந்த தடையை நீக்கிய போதிலும், டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று இந்த தீர்ப்பு குறித்துப் பேசுகையில், "நடுவர் ரஃபேல் கிளாஸின் கடந்த கால பின்னணியைச் சோதித்துப் பார்த்தால் அவர் சற்று சந்தேகத்திற்குரியவராகத் தெரிகிறார்" என்று விரிவான விளக்கம் அளிக்காமல் குற்றம் சாட்டினார்.பிரேசிலிய நடுவர் ட்ரம்பின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள ஃபிஃபா, "ரஃபேல் கிளாஸ் உலகின் முன்னணி தொழில்முறை நடுவர்களில் ஒருவர் மற்றும் ஃபிஃபாவின் உயரடுக்கு நடுவர் குழுவின் மதிப்புமிக்க உறுப்பினர். அவரது தொழில் வாழ்க்கையில் எப்போதும் மிக உயர்ந்த நேர்மையையும் நிபுணத்துவத்தையும் அவர் நிரூபித்துள்ளார்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடுவர்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், நடுவர்கள் இல்லாமல் கால்பந்து போட்டி சாத்தியமில்லை என்றும் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ வலியுறுத்தியுள்ளார்.

