கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படு முனையத்தை விஸ்தரிக்கும் பணிகளை நிறைவு செய்வதற்காக, மெஸ்ஸர்ஸ் மேகா இன்ஜினியரிங் (M/s Maga Engineering (Pvt.) Ltd) நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 36 செக்-…

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படு முனையத்தை விஸ்தரிக்கும் பணிகளை நிறைவு செய்வதற்காக, மெஸ்ஸர்ஸ் மேகா இன்ஜினியரிங் (M/s Maga Engineering (Pvt.) Ltd) நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 36 செக்-இன் கவுண்டர்கள் மற்றும் பயணிகள் முனையத்தை விமான அணுகல் பகுதிகளுடன் இணைக்கும் ஆறு நடைபாதைகளைக் கொண்ட புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. ஆறு நடைபாதைகளைக் கொண்ட புதிய கட்டிடம்

இதன் மூலம் புறப்படும் பயணிகளுக்கான வசதிகளை விஸ்தரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

சர்வதேச போட்டித்தன்மை கொண்ட கொள்முதல் முறைமைக்கமைய, மூன்று ஏலங்கள் பெறப்பட்டன. உயர் மட்ட நிரந்தர கொள்முதல் குழுவின் மதிப்பீடு மற்றும் பரிந்துரைகளைத் தொடர்ந்து, மிகக் குறைந்த தகுதியான ஏலதாரராக மேகா இன்ஜினியரிங் நிறுவனம் அடையாளப்படுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 7.26 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (VAT நீங்கலாக) மற்றும் 3.77 பில்லியன் ரூபாவாகும் (VAT நீங்கலாக). இதற்கான யோசனையை துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்திருந்தார்.