முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல்துறை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்…

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல்துறை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் பசில் ராஜபக்ச தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகாததைக் கருத்தில் கொண்டு இந்த பிடியாணை உத்தரவு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், அவரது வெளிநாட்டு பயணத்திற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதேவேளை, குறித்த வழக்கின் அடுத்த விசாரணை ஓகஸ்ட் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.