அநுராதபுரம், மிஹிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 'சிசு செரிய' பேருந்துடன், மூன்று பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
அநுராதபுரம், மிஹிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 'சிசு செரிய' பேருந்துடன், மூன்று பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண், மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவர்களில் ஒருவரும், காயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் செல்வதற்காகப் பொலன்னறுவையிலிருந்து வருகை தந்துள்ளனர்.
அவர்கள் மற்றொரு நண்பருடனும் இணைந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய 'சிசு செரிய' பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அநுராதபுரம் போக்குவரத்துப் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

