மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, தான் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இருந்து இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனப் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.நேற்று (17) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொ…

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, தான் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இருந்து இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனப் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.நேற்று (17) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நடைமுறைக்கு வரும் வகையில் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஆளுநர் பதவியை ஏற்கும் சந்தர்ப்பத்திலேயே, மிகக் குறுகிய காலத்திற்குள் நான் இதிலிருந்து விலகப் போவதாக ஜனாதிபதிக்குத் தெரிவித்துவிட்டே பதவியைப் பொறுப்பேற்றேன்.ஆயினும், 'டித்வா' சூறாவளி நிலைமை காரணமாக மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, எனது முடிவை இதுவரையில் பிற்படுத்தியிருந்தேன்.

முற்றிலும் தனிப்பட்ட காரணத்தினால் நான் தனது பதவியிலிருந்து விலகுகின்றேன். இதற்கு எவருடையோ அழுத்தமோ வேறு விடயங்களோ காரணம் இல்லை.

ஜனாதிபதி என்னுடைய பதவி விலகலை ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளேன் என்றும் பேராசிரியர் சரத் அபேகோன் மேலும் தெரிவித்துள்ளார்.