12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த இரண்டு வருடங்களாகத் தனது தாத்தாவினால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பளை பகுதியில் இ…

12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த இரண்டு வருடங்களாகத் தனது தாத்தாவினால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பளை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

54 வயதுடைய குறித்த சந்தேகநபர் ஐந்து புதல்வர்களின் தந்தை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமி, சந்தேகநபரின் புதல்வர்களில் ஒருவரின் மகள் என கூறப்படுகின்றது.தாயார்   நான்கு வருடங்களாக வெளிநாட்டில்

வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த கம்பளைப் பொலிஸார், சிறுமியின் தாத்தாவைக் கைது செய்து கம்பளை நீதவான் சரசி ஸ்ரீ பரணமன முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சிறுமியின் தாயார் சுமார் நான்கு வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், சிறுமிக்கு பத்து வயதாக இருந்தபோது முதன்முதலாகச் சந்தேகநபரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், அன்றிலிருந்து அவர் தொடர்ச்சியாக இக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இரு நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக அவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளின்போது, அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, தனது தாத்தா நீண்டகாலமாகத் தன்னைத் துன்புறுத்தி வருவதாகச் சிறுமி வெளிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கம்பளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாங்க கன்னங்கர மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தயால் இலங்கக்கோன் ஆகியோரின் பணிப்புரையின் பேரில், கம்பளைப் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.