நாட்டில் பதிவு செய்யாமல் இயங்கி வரும் அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. முதியோர் இல்லங்களை உரிய முறையில் பதிவு செய்து கொள்வதற்காக எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக த…
நாட்டில் பதிவு செய்யாமல் இயங்கி வரும் அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.
முதியோர் இல்லங்களை உரிய முறையில் பதிவு செய்து கொள்வதற்காக எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிதும் தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதிக்குள் பதிவு நடவடிக்கைகளை நிறைவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு எதிராக சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் தற்போது 459 முதியோர் இல்லங்கள் இயங்கி வரும் நிலையில், அவற்றில் இதுவரை 148 இல்லங்கள் மாத்திரமே தேசிய முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில், அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டு உரிய தரநிலைகளை பின்பற்ற வேண்டும் எனவும் செயலகம் வலியுறுத்தியுள்ளது.

