பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த காலங்களில் ஒரே அமைச்சின் கீழ் அல்லது வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே நோக்கத்திலான பல்வேறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. மூடுவதற…

பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஒரே அமைச்சின் கீழ் அல்லது வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே நோக்கத்திலான பல்வேறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. மூடுவதற்கான செயற்பாடுகள்இலங்கை உரக் கூட்டுத்தாபனம் செயற்பாட்டில் இருக்கத்தக்கதாக எப்பாவல பொஸ்பேட் நிறுவனம் உருவாக்கப்பட்டமை அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.பல்வேறு நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அவ்வாறான நிறுவனங்களைத் தொடர்ந்து பராமரிப்பதால், அரசாங்கம் கூடுதல் செலவுச் சுமையை ஏற்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடுவதற்கான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே செயற்பாட்டிற்கான பல நிறுவனங்கள் இருப்பதால், திட்டங்களைச் செயல்படுத்துவதில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.