அம்பாந்தோட்டை , ஹுங்கம பகுதியில் கால்நடைகள் பயிர்களை அழித்தது தொடர்பான தகராறு முற்றியதில், கால்நடை உரிமையாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் கால்நடைகள், மற்றொருவர் பயிரிட்டிருந்த மரக்கறி பயிர்களை அழித்துள்ளன. இது குறித்த இழப்பீட்டைப்…

அம்பாந்தோட்டை , ஹுங்கம பகுதியில் கால்நடைகள் பயிர்களை அழித்தது தொடர்பான தகராறு முற்றியதில், கால்நடை உரிமையாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் கால்நடைகள், மற்றொருவர் பயிரிட்டிருந்த மரக்கறி பயிர்களை அழித்துள்ளன. இது குறித்த இழப்பீட்டைப் பேசுவதற்காக, சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர் நேற்று(19.07.2026) சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.சிகிச்சை பலனின்றி உயிரிழப்புவாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த பயிர்ச்செய்கை மேற்கொண்ட நபர் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் இணைந்து, கால்நடைகளின் உரிமையாளரை கூரிய ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஹுங்கம பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.