பயிற்சி பெறும் கடற்படை வீரர்களின் தங்குமிட மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தென் கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் நிபுண நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுத் தொகுதி இன்று (16) திறந்து வைக்கப்பட்டுள்ளது. தென் கடற்படைக் கட்டளையின் தளபதி ரி…
பயிற்சி பெறும் கடற்படை வீரர்களின் தங்குமிட மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தென் கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் நிபுண நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுத் தொகுதி இன்று (16) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தென் கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன தலைமையில் இந்த திறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
கடற்படையின் சிவில் பொறியியல், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளின் தொழில்நுட்ப மற்றும் மனித வள பங்களிப்புடன் இந்த வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு பங்களிப்பு வழங்கிய கடற்படை வீரர்களை தென் கடற்படைக் கட்டளையின் தளபதி பாராட்டி கௌரவித்தார்.
புதிய வீட்டுத் தொகுதி மூலம் பயிற்சி கடற்படை வீரர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் முறையான தங்குமிட சூழல் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் நலன்புரி நிலையை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தென் கடற்படைக் கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

