பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நேற்றைய (08) தினம் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.புதிய சிறைச்சாலை சிறைச்சாலைகள் அ…
பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நேற்றைய (08) தினம் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.புதிய சிறைச்சாலை சிறைச்சாலைகள் அவசரச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 54)-இன் படி, சிறைச்சாலைகள் அவசரச் சட்டத்தின் பணிகளுக்காக அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப் பழைமையான சிறைச்சாலைகளில் ஒன்றான போகம்பர சிறைச்சாலை, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டு, தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
தற்போது குறித்த சிறைச்சாலையின் பழைய கட்டிடங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் வசம் இருக்க, புதிய மற்றும் தற்காலிக கட்டிடங்கள் மூலம் அங்கு புதிய சிறைச்சாலையொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

