ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ஃபேஸ்புக்கில் நடைபெறும் விவாதங்கள் பயனற்றவை என்றும், அது புத்திசாலிகள் கருத்துப் பரிமாறும் தளமாக இல்லையென்றும் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் ஃபேஸ்புக் பக்கமே போவதில்லை. ஏனென்றால் அதற்குள் இருப்பது ஒரு…
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ஃபேஸ்புக்கில் நடைபெறும் விவாதங்கள் பயனற்றவை என்றும், அது புத்திசாலிகள் கருத்துப் பரிமாறும் தளமாக இல்லையென்றும் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் ஃபேஸ்புக் பக்கமே போவதில்லை. ஏனென்றால் அதற்குள் இருப்பது ஒரு சில முட்டாள்கள்தான். அது புத்திசாலிகள் போராடும் களம் அல்ல. அதனால் நான் அங்கு சென்று பார்ப்பதில்லை. எமது கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள அனைவரையும் அதற்குள் கொண்டு சென்றால், ஒருவருக்கு ‘திருடன்’, மற்றொருவருக்கு ‘கொள்ளைக்காரன்’, இன்னொருவருக்கு ‘போதைப்பொருள் வியாபாரி’ என்று முத்திரை குத்தப்படும். அதன் பின்னர் எதிர்க்கட்சியாக நாம் யாருடன் இணைந்து பணியாற்றுவது?” எனக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், அவரது உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் இந்த கருத்து வெளியிடப்படுவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னரே கடைசியாக இவற்றைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

