அம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தின் பெண் நீதிபதியின் பணியை இடைநிறுத்துவதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நீதிபதி தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக கிடைக்கப்பெற்றிருந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட…
அம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தின் பெண் நீதிபதியின் பணியை இடைநிறுத்துவதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நீதிபதி தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக கிடைக்கப்பெற்றிருந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அவரது பணியை இடைநிறுத்த நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.கடந்த ஒரு வருட காலப்பகுதியில் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துதல் மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பல நீதிபதிகளின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

