பெண் ஒருவருக்கு நடந்த அசாதாரணத்தை தீர்த்து வைப்பதாக பாசாங்கு காட்டி அவளிடம் பணம் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரிய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் என தொலைபேசியில் பேசியவர் தொடர்பில் குருநாகல் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; தனது தந்தை…

பெண் ஒருவருக்கு நடந்த அசாதாரணத்தை தீர்த்து வைப்பதாக பாசாங்கு காட்டி அவளிடம் பணம் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரிய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் என தொலைபேசியில் பேசியவர் தொடர்பில் குருநாகல் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; தனது தந்தைக்கு சொந்தமான, நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட காணியை, பிரதேச செயலகத்தினால் சட்டப்பூர்வமாக வழங்க மறுப்பதாகவும் குருநாகல் 54ஆம் பிரிவின் கிராம உத்தியோகத்தரும் தடுப்பதோடு எவ்வித கட்டுமானத்தையும் செய்ய விடுவதில்லை. அரச நிறுவனங்கள் போடும் தடைகள்எங்களை அங்கிருந்து விலகுமாறும், சட்டவிரோத கட்டுமானங்களை செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறார்கள். எங்களை அங்கு குடியேறவோ, ஒரு வீடு கட்டவோ அனுமதிப்பதில்லை. இந்த பிரச்சினை தொடர்பில்  ஜனாதிபதி , பிரதமரிடம் நீதி கேட்கிறேன் என ஊடகங்கள் வாயிலாக குறித்த பெண் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அரச அதிகாரிகளிடமிருந்து தனக்கு நேர்ந்த அநீதிக்கு முறையான தீர்வு கிடைக்காததால், சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார். அந்தச் செய்தி ஒளிபரப்பாகி சில மணித்தியாலங்கள் செல்வதற்குள், தான் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் என அறிமுகப்படுத்திய நபர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவளது பிரச்சினை குறித்து வினவியுள்ள அந்த நபர், அதற்குரிய அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர், அந்தப் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் இந்த நபர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். தொலைபேசி உரையாடல்தொலைபேசி உரையாடலின் போது குறித்த பெண்ணிடம் பல தகவல்களை அவர் கேட்டுள்ளார்.அதன் பின்னர் தான் எங்கு வரவேண்டும் என கோட்டுள்ளார்.அப்போது "நீ பத்தரமுல்லைக்கு வர வேண்டும். சும்மா தேவையில்லாமல் கண்ட கண்ட இடங்களுக்குச் சென்று, அலைந்து திரிந்து ஏமாறுவதை விட, எளிதான வழி  இது தான்“ எனக் கூறியுள்ளார். எவ்வாறாயினும், உரையாடலின் போது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அந்தப் பெண் மேலும் கேள்வி எழுப்பிய போது, தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் ஒரு போலிச் செயலாளர் என்பது அம்பலமாகியுள்ளது. அதன் பின்னர் அவர் அவளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாகக் குறிப்பிடப்படுகிறது. “நீ ஒரு கருங்கல்லில் போய் தலையை முட்டிக் கொண்டாய். இதோ பார், இன்னும் 24 மணித்தியாலத்திற்குள் உனக்கு என்ன அதிகாரம் இருந்தாலும், நான் உன்னைத் தேடி வருவேன். உனக்கு என்ன நடக்கும் என்பதை நீயே நன்றாகப் பார்த்துக்கொள்வாய்" என மிரட்டியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் தற்போது குருநாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதற்கமைய, குருநாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் எனப் போலியாகத் தோன்றி அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர் யார் என்பதைக் கண்டறிய விசேட பொலிஸ் குழுவொன்று பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அனைத்து அரசு அதிகாரிகளும் குறித்த நபர் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் என ஏமாந்துவிட்டார்கள். இப்போது எனது பிள்ளையைக் கடத்துவதாகக் கூறுகிறார். இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் பயப்படுகிறேன். இந்த நபர் யார் என்பதைச் சட்டத்தின் முன் நிறுத்தி, எனக்கு நியாயத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.