தான் சினிமா துறையில் காலடி எடுக்கப்போவதாக அறிவித்தபோது, தனது பெற்றோர், தங்கை மற்றும் நண்பர்கள் வழங்கிய ஊக்கம் தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக முதலமைச்சர் விஜயின் மகன் , இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார…
தான் சினிமா துறையில் காலடி எடுக்கப்போவதாக அறிவித்தபோது, தனது பெற்றோர், தங்கை மற்றும் நண்பர்கள் வழங்கிய ஊக்கம் தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக முதலமைச்சர் விஜயின் மகன் , இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனது திரைப்பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில் அவர்கள் காட்டிய நேர்மறையான அணுகுமுறை, தன் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிக்மா’ (Sigma) திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டபோது, நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சூரி உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் தன்னை வாழ்த்தி ஆசீர்வதித்ததாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

