எம்பிலிப்பிட்டிய, கிரலவெல்லகட்டுவ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தனிப்பட்ட தகராறு காரணமாக, பெற்றோர் இருவர் அவர்களது மகனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 54 வயதுடைய தாயும் 58 வயதுடைய தந்தையுமே இச்சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே…
எம்பிலிப்பிட்டிய, கிரலவெல்லகட்டுவ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தனிப்பட்ட தகராறு காரணமாக, பெற்றோர் இருவர் அவர்களது மகனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
54 வயதுடைய தாயும் 58 வயதுடைய தந்தையுமே இச்சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதலே இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்போது, ஆத்திரமடைந்த 26 வயதான மகன், கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி தனது பெற்றோரைத் தாக்கியுள்ளார். பலத்த காயங்களுக்குள்ளான இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மகனைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். தற்போது சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

